சினிமா
கொடிக்கட்டி பறந்த முருகதாஸுக்கு இப்படி ஒரு நிலைமையா முருகதாஸ்

கொடிக்கட்டி பறந்த முருகதாஸுக்கு இப்படி ஒரு நிலைமையா முருகதாஸ்
இந்திய சினிமாவின் நம்பர் 1 இயக்குனராக ஒரு காலத்தில் இருந்தவர். இவரின் படங்களில் நடிக்க இந்திய சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களும் வரிசை கட்டி நின்றனர்.அப்படியிருக்க முருகதாஸ் ஸ்பைடர் படத்திலிருந்து தொடர் தோல்வியை தான் சந்தித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான சிக்கந்தர் படம் இவர் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த படம்.ஆனால், இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவராததால் முருகதாஸ் அடுத்து இயக்கி வரும் சிவகார்த்திகேயன் படம் தான் அவரின் கடைசி அஸ்திரம் அதிலும் தோல்வி என்றால் நடையை கட்ட வேண்டியது தான் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.