Connect with us

இலங்கை

அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்பால் தொழிற்றுறைகளுக்கு பேரழிவு

Published

on

Loading

அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்பால் தொழிற்றுறைகளுக்கு பேரழிவு

இலங்கையின் ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 44சதவீத தீர்வை வரி விதிப்பானது முக்கிய தொழிற்றுறைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று கென்யாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் கனா கணநாதன் தெரிவித்துள்ளார்.

அவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

Advertisement

நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான தொழில்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்கும் முக்கிய வருமானம் தரும் துறையாக ஆடை வர்த்தகம் உள்ள நிலையில் .அமெரிக்க கொள்வனவாளர்கள் இலங்கையிலிருந்து வருடாந்தம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடைகளைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேற்படி ஆடைத்தொழிற்றுறைக்கு அப்பால் அமெரிக்காவின் இந்ததீர்வை வரி விதிப்பானது அதிகரித்த விலைகள் காரணமாக இந்தியா, கென்யா போன்ற உலக தேயிலை விநியோகத்தர்களுக்கு எதிரான போட்டியில் இழப்பை சந்திக்கும் அபாய நிலையிவுள்ள நாட்டின் தேயிலை தொழிற்றுறைக்கு இடர்பாட்டை உண்டாக்குவதாக உள்ளது.

அமெரிக்காவின் இந்த உயர் தீர்வை வரிகள் இலங்கை ஏற்றுமதிகள் அமெரிக்க சந்தையில் தங்கள் பங்கை தக்கவைத்துக் கொள்வதில் சிரமத்தை அதிகரித்துள்ளதால் மசாலா பொருட்கள், கடல் உணவு, தேங்காய் அடிப்படையிலான உற்பத்திகள் என்பன உயர் இதனால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.

Advertisement

அமெரிக்கா இலங்கையின் உயர் மட்ட வர்த்தக பங்காளர்களில் ஒருவராக உள்ள நிலையில் இந்த நகர்வானது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, போட்டி மற்றும் வர்த்தக நிலைபேறான தன்மை என்பன தொடர்பில் தீவிர கவலையை அதிகரிப்பதாக உள்ளது.

மேற்படி தீர்வை வரி இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை குறிப்பதாகவுள்ள ஆடைத் தொழிற்றுறைக்கு எவ்வாறு மறுவடிவம் கொடுக்கப் போகிறது என்பது அழுத்தம் தரும் கேள்வியாகவுள்ளது.

முக்கியமாக இந்தப் பேரழிவு விளைவுகளை முறியடிக்க என்ன தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படப் போகின்றன என்பது மிகவும் முக்கியமானதாகவுள்ளது

Advertisement

44 சதவீத தீர்வை வரியானது இலங்கையின் ஆடைத் தொழிற்றுறையிலான செலவினத்தை ஊதிப் பெருக்க வைத்து இந்தத் தொழிற்றுறையின் பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரான போட்டித்தன்மையை குறைப்பதாக உள்ளது.

இதன் பெறுபேறு அமெரிக்க கொள்வனவாளர்களிடமிருந்தான கேள்விகளில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டு பரந்தளவான வேலையின்மை ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய அடியாக அமையும்.

இந்நிலையில் முன்னோக்கிச் செல்லும் வழியைக் கண்டறிதல் அவசியமாகிறது.

Advertisement

அவசர அரசாங்க தலையீடு அவசியமாவதுடன் வர்த்தகங்கள் தைரியமான தந்திரோபாயமான முன்னடியெடுத்து வைப்புகளை எடுக்க வேண்டியுள்ளது.

அத்துடன் புத்துருவாக்கங்களை வலியுறுத்தல், சந்தைகளை பன்முகப்படுத்தல், விநியோக வலைப்பின்னல்களை வலுவூட்டதல் என்பன மேற்படி தீரு்வை வரியின் விளைவுகளைத் தணிவிப்பதற்கு உதவக் கூடிய முக்கிய நடவடிக்கைகளாகும்.

இலங்கை இந்த சவாலை மேலும் மீள்தன்மையுடைய உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மையுடைய வர்த்தக கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்ற முடியும். தீர்வை வரியின் தாக்கத்தை தணிவிக்கும் நடைமுறைத் தீர்வொன்றாக மூன்றிலொரு செலவினப் பகிர்வு மாதிரியொன்றை பயன்படுத்தலாம்.

Advertisement

இலங்கை உற்பத்தியாளர்கள் விலையிடலைப் பேணுவதற்கான இலாப இடைவெளிகளைக் குறைப்பதானூடாக செலவினத்தின் ஒரு பகுதியை உட்கிரகித்தல், அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வணிக சின்னங்கள் இலங்கை விநியோக சங்கிலியின் ஸ்திரத்தன்மையான விநியோகச் சங்கிலியின் நீண்ட கால அனுகூலங்களை அங்கீகரித்து நிதிச் சுமையை பகிர்த்தல், மூலப்பொருள் விநியோகத்தர்கள் கழிவுகளை வழங்குதல் அல்லது நீடித்த கடன் தவணைகளினூடாக விலையிடல் தொடர்பில் நெகிழ்வுத்தன்மையை விரிவாக்கம் செய்து செலவின அதிகரிப்பை சமநிலைப்படுத்த உதவுதல் என்பனவே மேற்படி செலவின பகிர்வு திட்ட மாதிரியின் அம்சங்களாகும்.

இந்த சிறப்பாக திட்டமிடப்பட்ட மூலோபாயங்களை அமுல்படுத்துவதனூடாக இலங்கை ஏற்றுமதித் துறை சவால்களை எதிர்கொண்டு முக்கிய தொழிற்றுறைகளை பாதுகாப்பதுடன் அதிகரித்து வரும் எதிர்வுகூற முடியாத உலக பொருளாதாரத்தில் நிலையான வர்த்தகத்துக்கான உறுதியான அடித்தளத்தை ஸ்தாபிக்கக் கூடியதாகவிருக்கும்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன