இலங்கை
எல்ல ஒடிஸி ரயில் தடம்புரழ்வு ; பயணிகள் அவதி

எல்ல ஒடிஸி ரயில் தடம்புரழ்வு ; பயணிகள் அவதி
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்க இருந்த எல்ல ஒடிஸி ரயில் நானுஓயாவில் இன்று (05) தடம் புரண்டுள்ளது.
எல்ல ஒடிஸி ரயில் இன்று காலை 08:10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இருந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது.
ரயிலில் பதுளை நோக்கிப் பயணம் மேற்கொள்வதற்காக வருகை தந்திருந்த பயணிகள் பாரிய சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மிக விரைவில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரயில் சேவை வழமைக்குத் திரும்பவுள்ளதாக நானுஓயா புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.