விளையாட்டு
சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர்: ஓய்வு வதந்தியை கிளப்பிய நெட்டிசன்கள்

சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர்: ஓய்வு வதந்தியை கிளப்பிய நெட்டிசன்கள்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:30 சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெறும் 17-வது ஆட்டத்தில் லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டியை நேரில் காண தோனியின் பெற்றோர்கள் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு வந்துள்ளார்கள். அவர்களது வருகை தற்போது தோனி இந்தப் போட்டியுடன் ஓய்வு பெறுகிறாரா? போன்ற வதந்திகளைத் தூண்டியுள்ளது.தோனியின் பெற்றோர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா தவிர யாரும் பெரும்பாலும் தோனியின் போட்டியை காண நேரில் வந்தது கிடையாது. இந்த சூழலில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியை அவர்கள் காண வந்திருப்பது சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், தோனி இன்றைய போட்டியுடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்பது போன்ற வதந்திகளும் பரப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டம், 2 முறை சாம்பியன்ஸ் லீக் ட்வென்டி20 கோப்பை வென்ற கொடுத்தவர் தோனி. மேலும், ஐ.பி.எல்-லில் 267 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 232 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார், அவற்றில் 5,289 ரன்களை 39.18 சராசரியாகவும், 137.70 ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளார். மேலும், அவர் சென்னை அணிக்காக 237 போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் தோனி 40.30 சராசரியாகவும் 139.46 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 4,715 ரன்கள் எடுத்துள்ளார்.Parents of Thala @MSDhoni are at the CHEPAUK for the first time ever 💛#WhistlePodu #CSKvsDC #IPL2025 pic.twitter.com/b40A27g4M3Cutest Picture of the day 🥹🫶#MSDhoni pic.twitter.com/Ps0MeNvmqCA special sight at Chepauk – MS Dhoni’s family enjoying the game! 💛📸 Photo of the day! 👏#CSKvDC #MSDhoni #Chepauk pic.twitter.com/sz3S7RC2Ib