இலங்கை
ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!

ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!
இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துகு்கு வந்த இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறப்பு வரவேற்பளித்தார்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி நாளை (06) வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
அதேவேளை, மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 9 மணிக்கு அரச மரியாதை வழங்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த அரச மரியாதை வழங்கும் நிகழ்வில் 19 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, வரவேற்பு அளிக்கப்பட்டது.