உலகம்
ட்ரம்பின் வரி விதிப்பால் பில்லியனர்கள் சொத்து மதிப்பில் பெரும் வீழ்ச்சி!

ட்ரம்பின் வரி விதிப்பால் பில்லியனர்கள் சொத்து மதிப்பில் பெரும் வீழ்ச்சி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பால் உலகப் பணக்காரர்கள் பலரின் சொத்துமதிப்புக்கள் ஒரே நாளில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
பில்லியனர்களின் சொத்து மதிப்பைக் கண்காணிக்கும் ப்ளூம்பேர்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒட்டுமொத்த பில்லியனர்களின் சொத்துக்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 208 பில்லியன் டொலர் சரிவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 13 ஆண்டுகளில் ஒருநாளில் ஏற்பட்ட நான்காவது மிகப் பெரிய சரிவாகும். கொரோனா தொற்றுக் காலத்துக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய சொத்து மதிப்புச் சரிவு இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவுநர் மார்க் ஷக்கர்பேர்க்கின் சொத்து மதிப்பு 17.9 பில்லியன் டொலரையும், ஜெஃப் பெசோஸ் 15.9 பில்லியன் டொலரையும், எலான் மஸ்க் 11 பில்லியன் டொலரையும் இழந்துள்ளனர் என்று ப்ளூம்பேர்க் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி அமெரிக்க பொருள்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிக்கப்படும் அறிவித்திருந்தார்.