இந்தியா
புகாரை மட்டும் சொல்லுங்கள்… நான் இருக்கிறேன்: மழைநீரை வெளியேற்ற களத்தில் இறங்கிய புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ

புகாரை மட்டும் சொல்லுங்கள்… நான் இருக்கிறேன்: மழைநீரை வெளியேற்ற களத்தில் இறங்கிய புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சவரிராயலு வீதி மற்றும் சின்னவாய்க்கால் வீதி இடைப்பட்ட பகுதியில் உள்ள பள்ளிவாசல் எதிர்ப்பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது இன்று காலை பெய்த மழை காரணமாக பள்ளிவாசல் எதிர் பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது அப்பகுதி மக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் 05.04.2025 இன்று உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு(எ)குப்புசாமி உடனடியாக மேற்கண்ட இடத்துக்கு விரைந்து நகராட்சி ஊழியர்களுடனும் மனிதநேய மக்கள் சேவை இயக்க அலுவலக சேவகர்களுடன் இணைந்து தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும் பலர் உடன் இருந்தனர்.