இலங்கை
வவுனியாவில் பேருந்து நிலையம் ஒன்று இடித்தழிப்பு

வவுனியாவில் பேருந்து நிலையம் ஒன்று இடித்தழிப்பு
வவுனியா குருமன்காடு பகுதியில் பயன்பாடற்ற நிலையில் இருந்த பேருந்து நிலையம் நகரசபையால் இன்று (5) அகற்றப்பட்டது.
பழமையான குறித்த பேருந்துத்தரிப்பிடம் தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.
குறித்த பேருந்துத்தரிப்பிடத்தை அகற்றுமாறு நகரசபைக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனையடுத்து இன்றையதினம் நகரசபையால் குறித்த தரிப்பிடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
இதேவேளை அகற்றப்பட்ட பேருந்து நிலையத்திற்கு அண்மையில் தேவையான புதிய பேருந்து தரிப்பிடம் ஒன்றை அமைக்க உள்ளதாக வவுனியா நகரசபை செயலாளர் தெரிவித்திருந்தார்.