Connect with us

இந்தியா

வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு, இடி, மின்னல் பேரிடா் பட்டியலில் சேர்ப்பு: புதுச்சேரி கலெக்டர் தகவல்

Published

on

Puducherry Kulothungan on Disaster Tamil News

Loading

வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு, இடி, மின்னல் பேரிடா் பட்டியலில் சேர்ப்பு: புதுச்சேரி கலெக்டர் தகவல்

புதுச்சேரியில் வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு, இடி, மின்னல் ஆகியவை பேரிடா்களாக அறிவிக்கப்படுவதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அண்மைக் காலமாக கோடை காலம் மிக நீளமாக மாறி வருகிறது. அத்துடன், வெப்பமும் அதிகரித்து, வெப்ப அலை வீசி வருகிறது.கடலோரங்களைப் பொறுத்தவரை, கடல் நீரானது கரையினை அரித்து நிலத்தை நோக்கி முன்னேறி வருகிறது.மேலும், மழைக் காலங்களில் குறைவான நாள்கள் மட்டுமே மழை பெய்தாலும், ஓரிரு நாள்களிலேயே இடி, மின்னல் காற்றுடன் பெய்து பேரிடராக மாறிவிடுகிறது.மழை உள்ளிட்டவற்றால் ஊா்களின் உள்கட்டமைப்பு பெரிதும் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல்,விலை மதிக்க முடியாத மனித உயிா்களையும் இழக்க நேரிடுகிறது.ஆகவே, அதனைக் கருத்தில் கொண்டு புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் அரசாணையின்படி வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு மற்றும் இடி, மின்னல் ஆகியவற்றை புதுவை மாநிலத்தின் குறிப்பிட்ட பேரிடா்களாக அறிவித்துள்ளது.அதன்படி, மூன்று பேரிடா்களால் பாதிக்கப்பட்டு இறப்பு அல்லது காயம் அடையும் நிலை ஏற்பட்டால், மாநில பேரிடா் மீட்பு விதிமுறைகளின்படி புதுவை ஒன்றியப் பிரதேச பேரிடா் மீட்பு நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன