இலங்கை
700kg இற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது

700kg இற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது
நாட்டின் மேற்கு கடற்பரப்பில் இன்று (05) காலை கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 471 கிலோ 452 கிராம் ஐஸ் மற்றும் 191 கிலோ 752 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் 20 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகு, தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.