விளையாட்டு
CSK vs DC LIVE Cricket Score டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் – சென்னை பவுலிங்

CSK vs DC LIVE Cricket Score டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் – சென்னை பவுலிங்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:30 சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெறும் 17-வது ஆட்டத்தில் லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்துள்ளது. அதனால், சென்னை அணி பவுலிங் போடும். இரு அணிகளின் பிளேயிங் லெவன்டெல்லி கேபிடல்ஸ்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா.சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா நேருக்கு நேர் ஐ.பி.எல்-லில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 30 போட்டிகளில், சென்னை அணி 19 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது.