விளையாட்டு
சி.எஸ்.கே ஹாட்ரிக் தோல்வி; பேட்டிங் ஆர்டர் குறித்து பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறுவது என்ன?

சி.எஸ்.கே ஹாட்ரிக் தோல்வி; பேட்டிங் ஆர்டர் குறித்து பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறுவது என்ன?
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ள நிலையில், தற்போதைய பேட்டிங் ஆர்டர் மீது இன்னும் நம்பிக்கை இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.நடப்பு ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே அணி வெற்றிகளை பெற முடியாமல் தவித்து வருகிறது. முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய பின்னர், அடுத்து நடந்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.இந்தநிலையில், சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிஹாம் 2 விக்கெட் வீழ்த்தினார்.இதன் மூலம் சென்னை அணி இந்த தொடரில் இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களில் 3 மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதுவும் ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தது. இது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஸ்டீபன் ஃபிளெமிங் கூறியதாவது, ”டெல்லிக்கு எதிரான போட்டியில் தொடக்க வரிசை சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகதான் டெவன் கான்வேயை கொண்டு வந்தோம். ஆனால், அது சரியாக அமையவில்லை. ராகுல் திரிபாதி நல்ல ரிசல்ட்டை தரவில்லை என்பதால் நேற்றைய போட்டியில் மாற்றங்களை மேற்கொண்டோம். ஆனால், அதுவும் பலன் அளிக்கவில்லை. முதல் வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடினால் தான் பின்வரிசை வீரர்களை தேவைக்கு ஏற்றார் போல் களம் இறக்க முடியும். இந்த பேட்டிங் ஆர்டர் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. தோனியின் ஓய்வு குறித்து எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அது என்னுடைய வேலை இல்லை. அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவருடன் வேலை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன், அவர் இன்னும் வலிமையாக தான் இருக்கிறார். அது பற்றி யாருமே அவரிடம் கேட்பதில்லை. நீங்கள் மட்டும் தான் கேட்கிறீர்கள்.” இவ்வாறு ஸ்டீபன் ஃபிளெமிங் கூறினார்.