விளையாட்டு
தோனி ஓய்வு குறித்து பாட்காஸ்டில் பதில்: அடுத்த சீசனில் விளையாடுவாரா? தீர்மானிப்பது யார்?

தோனி ஓய்வு குறித்து பாட்காஸ்டில் பதில்: அடுத்த சீசனில் விளையாடுவாரா? தீர்மானிப்பது யார்?
நேற்று சொந்த மண்ணில் டெல்லி கேபிடல்ஸிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்த பிறகு, மகேந்திர சிங் தோனி தனது ஆப் மூலம் ஒளிபரப்பப்பட்ட புதிய பாட்காஸ்டில் தனது எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். 43 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டெல்லிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே-வை வெற்றிக்கு அழைத்துச் செல்லத் தவறியதால் அணியில் அவரது இடம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஆங்கிலத்தில் படிக்க:டெல்லிக்கு எதிராக 74/5 என்ற நிலையில் தோனி களமிறங்கினார். இதன் பொருள் சென்னை அணிக்கு 56 பந்துகளில் 110 ரன்கள் தேவைப்பட்டது, ரன் குவிப்பு விகிதம் 12-க்கு சற்று குறைவாக இருந்தது. ஆனால், தோனி ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்தபோதும், சிஎஸ்கே 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சீசனில் சி.எஸ்.கே பெற்ற மூன்றாவது தோல்வி இதுவாகும். சி.எஸ்.கே ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.“நான் இன்னும் ஐ.பி.எல் விளையாடி வருகிறேன், ஒவ்வொரு வருடமாகத்தான் பார்க்கிறேன். எனக்கு 43 வயதாகிறது, இந்த ஐ.பி.எல் சீசன் முடியும் போது, ஜூலையில் எனக்கு 44 வயதாகிவிடும். அதனால் நான் இன்னும் ஒரு வருடம் விளையாட வேண்டுமா என்று முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் உள்ளன. அதை நான் தீர்மானிப்பதில்லை; உன்னால் விளையாட முடியுமா, இல்லையா என்பதை என் உடல் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று ராஜ் ஷாமனியின் பாட்காஸ்டில் தோனி கூறினார். இந்த போட்காஸ்ட் எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை.தோனி இந்த சீசனில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததால் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்: ஐபிஎல் 2025-ல் நான்கு இன்னிங்ஸ்களில் 30* அதிகபட்சமாக 76 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். இந்த சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பின் ஒன்பதாவது இடத்தில் அவர் பேட்டிங் செய்ய வந்ததும் விமர்சிக்கப்பட்டது.கேளுங்கள்: இந்த வார கேம் டைம் பாட்காஸ்டில், சென்னையின் தோனி மீதான ஆவல் குறித்து பேசுகிறோம்.சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், இந்த சீசனின் தொடக்கத்தில் தோனி ஏன் இவ்வளவு தாமதமாக பேட்டிங் செய்ய வருகிறார் என்று கேட்டதற்கு, “இது நேரத்தைப் பொறுத்தது. எம்.எஸ் தோனி அதை தீர்மானிக்கிறார். அவரது உடல்… அவரது முழங்கால்கள் முன்பு போல் இல்லை. அவர் நன்றாகத்தான் நகர்கிறார், ஆனால், இன்னும் உடலளவில் சோர்வு ஏற்படுகிறது. அவர் தொடர்ந்து பத்து ஓவர்கள் முழு வேகத்தில் பேட் செய்ய முடியாது. எனவே, அன்றைய நிலையைப் பொறுத்து அவரால் எவ்வளவு கொடுக்க முடியும் என்பதை அவர் கணிப்பார். இன்றைய ஆட்டத்தைப் போல நெருக்கடியான நிலையில் இருந்தால், அவர் சற்று முன்னதாக வருவார், மற்ற வாய்ப்புகள் இருக்கும்போது மற்ற வீரர்களை நம்புவார். எனவே, அவர் அதை சமன் செய்கிறார்” என்று விளக்கினார்.