பொழுதுபோக்கு
பிரபல தமிழ் சீரியல் நடிகர் திடீர் மரணம்: சோகத்தில் ரசிகர்கள்!

பிரபல தமிழ் சீரியல் நடிகர் திடீர் மரணம்: சோகத்தில் ரசிகர்கள்!
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய சஹானா என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதர். 2003-ம் ஆண்டு வெளிவந்ததுதான் சஹானா சீரியல். அந்த காலத்திலேயே கே.பாலசந்தரின் படங்களுக்கு கிடைத்த வரவேற்பை போல் சீரியல்களுக்கும் கிடைத்தது. முதல் சீரியலான சஹானாவிலேயே ஒய்.ஜி. மகேந்திரன், டெல்லி கணேஷ் ஆகிய ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீதருக்கு கிடைத்தது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தில் ஸ்ரீதர் நடித்திருந்தார். அதுபோல் மலையாள படங்களிலும் நடித்து உள்ளார். அப்பா ரோல்கள் என்றாலே ஸ்ரீதரை எனச் சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றார்.இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் வில்லன், அப்பா, குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில், அவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னை தி.நகர் உள்ள வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார். வள்ளியின் வேலன் சீரியலில் ஸ்ரீதரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.வள்ளியின் வேலன் சீரியலிலும் ஹீரோயினின் தந்தையாக நடித்தார். அவரது நடிப்புக்கு பல ரசிகர்கள் உண்டு. மிகவும் யதார்த்தமாக இருக்கும். நிஜ அப்பாவை அப்படியே பிரதிபலித்தது. சன் டிவியில் ஒளிபரப்பான தாமரை சீரியலில் போலீஸாக நடித்திருந்தார். இந்த சீரியலில் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார் ஸ்ரீதரன்.