விளையாட்டு
SRH vs GT LIVE Cricket Score, IPL 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் பலப்பரீட்சை

SRH vs GT LIVE Cricket Score, IPL 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் பலப்பரீட்சை
IPL 2025, SRH vs GT Live Cricket Score Updates: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது சொந்த மைதானமான ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் குஜராத் டைட்டன் அணியை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது. டாஸ் இரவு 7 மணிக்கு போடப்படும்.ஆங்கில்த்தில் படிக்க:ஐ.பி.எல் 18-வது சீசனில் 19-வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்த சீசனின் முதல் போட்டியில் ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை அடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை இருந்தபோதிலும், அடுத்த மூன்று போட்டிகளில் 200 ரன்களைக் கூட தாண்டவில்லை. ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிப் பாதையில் இருக்கும் நிலையில், ஐதராபாத்தில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதை சரி செய்ய முயற்சி செய்யும்.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அதர்வா டைடே, அபிநவ் மனோகர், அனிகேத் வர்மா, சச்சின் பேபி, ஹென்ரிச் கிளாசன், டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் படேல், கமிண்டு மெண்டிஸ், வியாண் முல்டர், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது ஷமி, ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனட்கட்.குஜராத் டைட்டன்ஸ் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பி. சாய் சுதர்சன், ஷாருக் கான், முகமது சிராஜ், டேவிட் மில்லர், மேத்யூ வேட், விருத்திமான் சஹா, ராகுல் திவேதியா, விஜய் சங்கர், அஸ்மதுல்லா ஒமர்சாய், ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், ரஷித் கான், நூர் அகமது, சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், தர்ஷன் நல்கண்டே, ஸ்வப்னில் சிங், கார்த்திக் தியாகி, சுஷாந்த் மிஸ்ரா.