சினிமா
‘அபூர்வ ராகங்கள்’ சாதனையை நினைவூட்டும் ‘கூலி’ படம்..! –சந்தோசத்தில் ரசிகர்கள்..!

‘அபூர்வ ராகங்கள்’ சாதனையை நினைவூட்டும் ‘கூலி’ படம்..! –சந்தோசத்தில் ரசிகர்கள்..!
இந்திய திரைப்பட வரலாற்றின் ஜாம்பவான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சிறப்பான நடிப்பு, அற்புதமான பங்களிப்பு மூலம் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடம் பெற்றுள்ளார். தற்போது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.`ரஜினியின் புதிய திரைப்படமான “கூலி”, அதிகாரபூர்வமாக ஆகஸ்ட் 14ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடன், ரஜினி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் டிரெய்லர், பாட்டுக்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் படம் திரையரங்கில் அமோக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ரஜினி நடித்த “அபூர்வ ராகங்கள்” என்ற படம் இதேநாளில் வெளியாகி அதிகளவு வரவேற்பினைப் பெற்றது. இந்த வரலாற்று சிறப்பை நினைவுகூர்ந்த ரசிகர்கள், இப்போது “கூலி” படமும் அதேபோல் மாபெரும் வெற்றியை தரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். “அபூர்வ ராகங்கள் போலவே கூலியிலும் நம்ம தலைவர் அசத்துவார்!” என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.