இலங்கை
“அரசியல் பழிவாங்கல்” பயன்படுத்தினால் சிக்கல்

“அரசியல் பழிவாங்கல்” பயன்படுத்தினால் சிக்கல்
அரசியல்வாதிகள் அரசியல் பழிவாங்கல் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று இலஞ்ச, ஊழல் தொடர்பான புலனாய்வுப் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் பற்றிய புலனாய்வு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
அரசியல் பழிவாங்கல் என்ற சொல் பல்வேறு சந்தர்ப்பங்களில் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் பழிவாங்கல் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று அரசியல்வாதிகளிடம் பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் பழிவாங்கல் என்ற சொல்லை பயன்படுத்துபவர்கள் மீது 2023ஆம் ஆண்டு ஊழல் ஒழிப்பு ஆட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்-என்றார்.