நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 07/04/2025 | Edited on 07/04/2025

கமல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் கமல்ஹாசன் லாஸ் வேகஸில் நடக்கும் என்.ஏ.பி.(NAB) ஷோ 2025 இல் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்வில் கலைத்துறையில் கதை சொல்லும் முறையில் புதிதாக இருக்கும் தொழில்நுட்ப உபகரணங்களை அறிமுகம் செய்யும் கண்காட்சியும் அடங்கும்.

Advertisement

இதில் தற்போது கமல் கலந்து கொண்டு அங்கு இருக்கும் உபகரணங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் புகைப்படங்கள் அவரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மீது எப்போதும் ஆர்வமாக இருக்கும் கமல் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று ஏ.ஐ. படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


<!–
–>

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

–>

Advertisement