Connect with us

இலங்கை

எம்.பி அர்ச்சுனா டிக்டொக் செயலி குறித்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Published

on

Loading

எம்.பி அர்ச்சுனா டிக்டொக் செயலி குறித்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

தனது பேஸ்புத் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அவர் தனது அறிக்கையில், “டிக்டொக் இதுவரை ஒரு பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நன்மைகளை விட தீமைகளே அதிகம். பலரின் உண்மையான முகங்கள் இந்த செயலி மூலம் வெளிப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் ஏதோ ஒரு நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இது, பின்னர் பிரபலமடைந்தவுடன் அதன் உள்நோக்கங்கள் மாறி, பலர் தங்கள் சுயரூபத்தை தமிழ் சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், “புலம்பெயர் தமிழ் மக்களுடன் தொடர்புகளைப் பேணுவது காலத்தின் தேவை மட்டுமல்ல, அது எங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்று நம்புகிறேன். டிக்டொக் தளங்கள் எந்தக் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அந்த நோக்கங்களுக்காகவே செயல்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, தனது சொந்த தளத்தில் புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் நேரடியாக உரையாடுவதற்கு ஒரு திட்டத்தை அறிவித்த அவர், “இன்று முதல் ஒவ்வொரு திங்கள், புதன், சனிக்கிழமைகளிலும், தேவைப்படும் அவசர நாட்களிலும், புலம்பெயர் தமிழ் சமூகம் என்னுடன் நேரடியாக இணைந்து, உங்கள் சந்தேகங்களையும், மதிப்புமிக்க ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்படும்.

முன்கூட்டியே தொடர்பு கொண்டு, உங்களை அடையாளப்படுத்தி இணைந்து கொள்ளலாம்,” என்று தெரிவித்தார்.

Advertisement

அவர் மேலும் எச்சரிக்கையாக, “எந்தக் காரணத்திற்காகவும் முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அது என்னுடன் உரையாடும் கடைசி நாளாக இருக்கும்,” என்று கூறினார்.

இந்த அறிவிப்பு, தமிழ் சமூகத்திற்கும் புலம்பெயர் மக்களுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன