Connect with us

இலங்கை

குடியிருக்க வீடு காணி இல்லை – நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்!…

Published

on

Loading

குடியிருக்க வீடு காணி இல்லை – நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்!…

குடியிருக்க வீடு காணி இல்லை, பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்த நிலையில்  ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்.

நேற்று (06) மாலை அச்செழு, அச்சுவேலியில் இருந்து நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். ஏழு வயதான ஆண் பிள்ளை மற்றும் ஆறு வயதுடைய பெண் பிள்றையுடன் கணவன், மனை நால்வராக குறித்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இந் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்காவின் கவனத்திற்கு சென்றடையும் வரை நடை பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இ.கலீபன் நடைபயணி தெரிவித்தார்.

Advertisement

ஆனாலும் இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளனர். இதன் போது ஆளுநர் நா.வேதநாயகன் இவர்களுக்கான காணியனை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு மருதங்கேணி பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டு ஆவண செய்யுமாறு கோரியுள்ளார்.

ஆளுநரின் கோரிக்கைக்காக்க மருதங்கேணி பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தி நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன