Connect with us

இலங்கை

குறைந்து வரும் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

Published

on

Loading

குறைந்து வரும் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

 தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து வருகின்றமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி சென்னையில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 5) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,310-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், இன்று (7) மேலும் தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (ஏப்ரல் 7) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,285-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் 18 காரட் தங்கம், கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,830-க்கும், ஒரு சவரன் 120 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன