Connect with us

இலங்கை

தாயை முதியோர் இல்லத்தில் விட மறுத்த கணவன் மீது அடி உதை!

Published

on

Loading

தாயை முதியோர் இல்லத்தில் விட மறுத்த கணவன் மீது அடி உதை!

தாயை முதியோர் இல்லத்தில் விட மறுத்த கணவனை பெண்வீட்டார் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

Advertisement

மத்திய பிரதேசம், குவாலியரை சேர்ந்தவர் விஷால் பத்ரா. கார் உதிரிப் பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது தாயை(70) முதியோர் இல்லத்திற்கு அனுப்பக் கூறி, விஷாலின் மனைவி நீலிகா வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு விஷால் மறுத்ததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் நீலிகாவின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் வந்து விஷாலை அடித்து தாக்கியுள்ளனர்.

Advertisement

இதனை தடுக்க வந்த தாய் சரளாவின் தலை முடியை பிடித்து இழுத்துப் போட்டு ஆக்ரோஷமாக அடித்துள்ளனர்.

தடுக்க வந்த அக்கம்பக்கத்தினரையும் அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரத்திற்குப் பின் அக்கம் பக்கத்தினர் குடும்பச் சண்டையை விலக்கியதை அடுத்து விஷால், தனது தாயாருடன் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன