இந்தியா
பராமரிப்பு இன்றி காணப்பட்ட இடம்; அதிகாரியை நேரில் அழைத்து நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ

பராமரிப்பு இன்றி காணப்பட்ட இடம்; அதிகாரியை நேரில் அழைத்து நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ
புதுச்சேரி, உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நகரின் முக்கிய பகுதியான அண்ணா சாலை போத்தீஸ் எதிர்புறத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இதனை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.கடந்த 2011- 2016 வரை அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரு (எ) குப்புசாமி, இந்த இடத்தை மீட்டு, மீண்டும் நகராட்சி வசம் ஒப்படைத்ததாக தெரிகிறது. இந்த இடம் தற்போது சரியான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதையறிந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நேரு (எ) குப்புசாமி, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமியை நேரில் அழைத்து, சம்பந்தப்பட்ட இடத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட இடத்தை சுத்தப்படுத்தி முறையாக பராமரிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.