Connect with us

தொழில்நுட்பம்

ரூ.25,000 பட்ஜெட்டில் 6 சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. முழு பட்டியல் இங்கே!

Published

on

Smartphones Launch Next Week In India

Loading

ரூ.25,000 பட்ஜெட்டில் 6 சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. முழு பட்டியல் இங்கே!

ரூ.25,000க்கு குறைவான சிறந்த கேமரா, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட 6 சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன? அவற்றின் முழுமையான விவரங்கள் குறித்து இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.1.மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (motorola edge 60 fusion)மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் மொபைலின் 8GB + 256GB வேரியன்ட்டின் அறிமுக விலை ரூ.22,999-ல் துவங்குகிறது. இந்த மொபைலின் 12GB + 256GB வேரியன்ட்டின் விலை ரூ.24,999 வரை செல்கிறது. 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் கூடிய 6.7-இன்ச் pOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 5,500 mAh பேட்டரி, 50mp கேமிரா, 12GB வரையிலான ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜை கொண்டு, MediaTek Dimensity 7400 ப்ராசஸரால் இயக்கப்படுகிறது. மோட்டோரோலா நிறுவனம் இந்த மொபைலை IP68 மற்றும் IP69 ரேட்டிங்குடன் மற்றும் MIL-STD மிலிட்டரி கிரேடு ப்ரொடக்ஷனை வழங்குகிறது.2. விவோ Y300 (Vivo Y300)6.67 இன்ச் AMOLED பன்ச்-ஹோல் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட்பின்பக்கத்தில் 2 கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா, 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி, 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ், 8ஜிபி ரேம், 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 5ஜி சப்போர்ட், போட்டோ தரத்தை மேம்படுத்தும் ஏஐ அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த போனின் விலை ரூ.21,999 முதல் தொடங்குகிறது3. நத்திங் போன் (3 ஏ) Nothing Phone (3a)Nothing Phone 3a செல்போன் 6.77-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 5,000mAh பேட்டரி. 108 எம்.பி. கேமிரா, 32 எம்.பி. முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.  12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி உள்ளது. இந்த போன் ஆரம்ப விலை ரூ.24,999 மட்டுமே.4. ரியல்மீ 3 ப்ரோ (Realme 3 Pro)ஸ்பீட் கிங், Realme 3 Pro, 6.77-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். 120Hz ரெஃப்ரஷ் ரேட்  மற்றும் Snapdragon 710 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் உடன் 4045mAh பேட்டரியுடன் வருகிறது. Realme 3 Pro ஆனது Sony IMX 519 16MP + 5MP பின்புற கேமராக்களையும், மேலும் தனித்துவமான மற்றும் விரிவான படங்களுக்கு 25MP செல்ஃபி கேமராவையும் ஆதரிக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.23,999 ஆகும்.5. ஒன்பிளஸ் நார்டு சி.இ.4 (OnePlus Nord CE 4 )ஒன்பிளஸ் நோர்ட் சி.இ 4 அம்சங்கள் (OnePlus Nord CE 4 specifications): 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவை (AMOLED display) உடன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.21,499 ஆகும்.6. சாம்சங் கேலக்ஸி ஏ35சாம்சங் கேலக்ஸி ஏ35 அம்சங்கள் (Samsung Galaxy A35 Specifications): இந்த சாம்சங் போனில் 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) வருகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.24,280 மட்டுமே.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன