பொழுதுபோக்கு
ஹேய் யூ… இது உங்களுக்காக; பூக்களுடன் புன்னகை வைத்த சீரியல் நடிகை!

ஹேய் யூ… இது உங்களுக்காக; பூக்களுடன் புன்னகை வைத்த சீரியல் நடிகை!
ஜீ தமிழில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் ஒன்று மீனாட்சி பொண்ணுங்க.பழம்பெரும் நடிகை அர்ச்சனா இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்.ஒரு கட்டத்தில் அர்ச்சனா விலகியதை தொடர்ந்து நடிகை ஸ்ரீரஞ்சனி மீனாட்சி கேரக்டரில் நடித்து வருகிறார்.பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யன் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மோக்ஷிதா பாய் நடித்து வந்தார்.மோக்ஷிதா பாய் ஒரு கட்டத்தில் விலகியதை தொடர்ந்து தற்போது சக்தி கேரக்டரில் சவுந்தர்யா ரெட்டி நடித்து வந்தார்.வெற்றி – சக்தி கேரக்டர்களுக்கு இடையிலான ரொமான்ஸ் காட்சி இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது ஜீ தமிழின் கெட்டிமேளம் சீரியலில், அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த சவுந்தர்யா ரெட்டி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.