இலங்கை
114 சபைகளுக்கு சிக்கல் இல்லை!

114 சபைகளுக்கு சிக்கல் இல்லை!
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, நீதிமன்றத் தடைகள் இல்லாத 114 உள்ளூராட்சிச் சபைகளுக்கு மட்டுமே வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஏனைய உள்ளூராட்சிச் சபைகளுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நீதிமன்றத் தீர்ப்புக்கள் தங்களுக்குக் கிடைத்த பின்னர் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியாகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். இந்தப் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.