சினிமா
அவர் சொன்னதைத்தான் செஞ்சேன், அவர்தான் கற்றுக்கொடுத்தார்!! சிறகடிக்க ஆசை ஸ்ருதி நாராயணன்..

அவர் சொன்னதைத்தான் செஞ்சேன், அவர்தான் கற்றுக்கொடுத்தார்!! சிறகடிக்க ஆசை ஸ்ருதி நாராயணன்..
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோஹினியின் தோழியாக நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். சில நாட்களில் அவரது மோசமான வீடியோ லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து, இந்த விஷயத்தில் அனைத்தும் எல்லைமீறி போய்விட்டது. போன் திரைக்கு பின் இன்னும் உறுதிப்படுத்தாத ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க துடிக்கிற அந்த வெட்கக்கேடான மனிதரை பற்றி யாருக்கும் பேச நேரமில்லை, இன்னும் இந்த விஷயம் ஒரு பெண்ணை சுற்றித்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று இரண்டு நொடிகள் கூட யாரும் யோசிக்கவில்லை என்று ஒரு விளக்கத்தை அளித்தார்.இந்நிலையில் Guts என்ற படத்தில் நடித்துள்ள ஸ்ருதி நாராயணன் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிலையில் தைரியமாக ஆடியோ லான்ச் நிகழ்ச்சி வந்து மேடையில் பேசியிருக்கிறார்.அவர் பேசுகையில், எனக்கு ஒன்றுமே தெரியாது, இந்த படத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ரங்கராஜ் சொன்னாரோ, அதைத்தான் செய்தேன். அவ்வளவு நுட்பமாக எனக்கு சொல்லிக்கொடுத்தார், கண்டிப்பாக இந்த படத்துக்கு உங்களுடைய ஆதரவு வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் அவரே கற்றுக்கொடுத்தார். இந்த படத்தில் நான் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கிறேம் அந்த கேரக்டர் நன்றாகவே இருக்கிறது என்று ஸ்ருதி நாராயணன் தெரிவித்துள்ளார்.