பொழுதுபோக்கு
ஆகாஷை கைவிடும் இனியா? பாக்யா கொடுத்த அட்வைஸ்; பாக்கியலட்சுமி சீரியலில் அப்டேட்

ஆகாஷை கைவிடும் இனியா? பாக்யா கொடுத்த அட்வைஸ்; பாக்கியலட்சுமி சீரியலில் அப்டேட்
பாக்கியலட்சுமி சீரியல் கதை தற்போது இனியாவின் திருமணத்தை சுற்றியே நடைபெற்று வரும நிலையில், இன்றைய எபிசோட்டில், கோபி, இனியா இருவரும் ஆகாஷ் வீட்டுக்கு சென்று பேச, ஆகாஷ் இனியாவுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒரு வார்த்தையை கூறியுள்ளார்.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், பாக்யாவும் அமிர்தாவும் ரெஸ்டாரண்டில் சோகமாக உட்கார்ந்திருக்க, மறுபக்கம், செல்வி புது டிஷ் பற்றி கேள்வி கேட்கிறாள். ஆனால் இதை கண்டுகொள்ளாத பாக்யா அமைதியாக இருக்க, செல்வி என்னாச்சு என்று அமிர்தாவிடம் விசாரிக்கிறாள். அப்போது அமிர்தா வீட்டில் ஒரே பிரச்னை என்று சொல்ல, செல்வி என்ன பிரச்னை என்று கேட்கிறாள்.இனியா கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறாள். ஆனால் வீட்டில் இருப்பவர்கள், அவளுக்கு கல்யாணம் பண்ண முடிவு செய்துவிட்டார்கள். அதேபோல் ரெஸ்டாரண்டை விலைக்கு கேட்டு கொடுக்க முடியாது என்று சொன்ன 3-வது நாள் அவர் பொண்ணு கேட்டு வீட்டுக்கு வருகிறார் எனக்கு ஒரே உறுத்தலாக இருக்கிறது என்று என்று பாக்யா சொல்ல, அதெல்லாம் விசாரிக்காம வீட்டில் எதுவும் செய்யமாட்டாங்க அக்கா என்று செல்வி சொல்கிறாள்.அவர் பொண்ணு கேட்ட உடனே பையன் எப்படி என்று விசாரிச்சிருப்பாங்க, அதோடு நீ என் பையனை பற்றி யோசிக்கியா அக்கா என்று செல்வி கேட்க, நான் எப்படி செல்வி யோசிக்காம இருக்க முடியும் என்று அழுகிறாள் பாக்யா. நீயும் இனியாவும் என் பையனை பற்றி யோசிக்க வேண்டாம். இனியாவுக்கு அழகான வாழ்க்கை வந்திருக்கு. நீ அவனுக்காக நிறைய யோசிச்சி நிறைவே பண்ணிட்ட, அவன் தலையில் என்ன எழுதியிருக்கோ அது கிடைக்கும் என்று செல்வி சொல்கிறாள்.மறுபக்கம் கோபி இனியாவை கூட்டிக்கொண்டு ஆகாஷ் வீட்டுக்கு சென்று, அவனிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் என்று சொல்கிறான். இனியாவுக்கு நல்ல வரன் வந்திருக்கு, பணக்கார சம்பந்தம். ஆனால் அவ கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறாள் என்று சொல்ல, என் வாழ்க்கையில் நிறைய சம்பாதிக்க வேண்டும். அதில் உன் பிரச்னையை என்னால் சுமக்க முடியாது. எங்க அப்பா சொல்வது போன்று அந்த பையனை திருமணம் செய்துகொள் என்று இனியாவிடம் ஆகாஷ் சொல்கிறான்.அதன்பிறகு இனியா வீ்ட்டுக்கு அழுதுகொண்டே வர, பாக்யா என்ன என்று விசாரிக்க ஆகாஷ் வீட்டுக்கு போனதை பற்றி சொல்கிறாள். அதன்பிறகு என்ன முடிவு எடுப்பது என்று குழப்பமாக இருக்கிறது என்று இனியாக சொல்ல, என் அப்பா இறந்தவுடன் என்னை இவருக்கு கட்டி வச்சிட்டாங்க, அதன்பிறகு என்னை நான் நிரூபிக்க 40 வருஷம் ஆச்சு. அடுத்தவர்கள் அவமானம், அசிங்கப்படுத்துவதை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். யோசித்து முடிவு செய் என்று பாக்யா சொல்கிறாள்.மறுநாள் சுதாகர் குடும்பத்துடன் இனியா ட்ரெஸ் எடுக்க சென்று வெகுநேரம் ஆகிவிட்டதால், ஈஸ்வரி பதட்டத்தில் இருக்க, அப்போது சுதாகர் இனியாவுடன் வீட்டுக்கு வருகிறார். கல்யாண புடவையை இனியா சீக்கிரம் செலக்ட் பண்ணிட்டா என்று சுதாகர் இனியாவுக்கு பாராட்டு தெரிவிக்க அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.