சினிமா
ஒரே ஆண்டில் 12 ஹிட் படங்கள்.. 19 வயதில் மரணமடைந்த இளம் நடிகை!! யார் தெரியுமா

ஒரே ஆண்டில் 12 ஹிட் படங்கள்.. 19 வயதில் மரணமடைந்த இளம் நடிகை!! யார் தெரியுமா
ஒரே வருடத்தில் 12 ஹிட் படங்களை கொடுத்த இளம் நடிகை குறித்து தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம். இந்திய சினிமாவில் இன்று வரை வேறு எந்த நடிகையாலும் இவர் செய்த இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.இவ்வளவு ஏன் ஸ்ரீதேவியால் கூட இந்த சாதனையை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட மாபெரும் சாதனையை படைத்தவர் நடிகை திவ்ய பாரதி. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையான இவர் தனது 12 வயதில் சினிமாவில் அறிமுகமானார்.பின் மாடலிங் துறையிலும் களமிறங்கினார். இவர் இயக்குநரும் தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலாவை திருமணம் செய்துகொண்டார். இளம் வயதிலேயே பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த திவ்ய பாரதி, ஒரே வருடத்தில் 12 சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இது மிகப்பெரிய சாதனை.இன்றளவும் இந்த சாதனையை வேறு எந்த நடிகையும் முறியடிக்கவில்லை. இப்படி மாபெரும் சாதனை படைத்த நடிகை திவ்ய பாரதி, தனது 19வது வயதில் மரணமடைந்தார். 1993ம் ஆண்டு தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக தகவல் கூறுகின்றன.ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த திவ்ய பாரதியின் மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இவர் மறைந்து 32 வருடங்கள் கடந்திருந்தாலும், இவருடைய ரசிகர்கள் திவ்ய பாரதியை மறக்கவே இல்லை.