இந்தியா
சைக்கிள் – பைக் மோதி விபத்து: சமையல் தொழிலாளி சம்பவ இடத்தில் மரணம்

சைக்கிள் – பைக் மோதி விபத்து: சமையல் தொழிலாளி சம்பவ இடத்தில் மரணம்
புதுச்சேரி- கடலூர் சாலையில் பைக்கில் சாலையை கடந்த சமையல் தொழிலாளர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானதில் சமையல் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுபுதுச்சேரி வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பாலபாஸ்கரன்(39), சமையல் தொழிலாளி.இவர் நேற்று சமையல் வேலைக்கு சென்று விட்டு காலை தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். புதுச்சேரி – கடலுார் சாலை, கிருமாம்பாக்கம் சாய்பாபா கோவில் அருகே சென்ற போது, வலது பக்கமாக சாலையை கடக்க முயன்றார். அப்போது, கடலுார் நோக்கி சென்ற மற்றொரு பைக் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து தொடர்பாக கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அதிவேகமாக வந்த பைக் மோதியதில் சமையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.