Connect with us

வணிகம்

மீண்டும் கட்டுப்பாட்டை எடுத்த புல்ஸ்: 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்

Published

on

Share Market

Loading

மீண்டும் கட்டுப்பாட்டை எடுத்த புல்ஸ்: 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தை இன்றைய நிலவரம்: சென்செக்ஸ் 1,085 புள்ளிகள் அதிகரித்ததால், தலால் வீதியை காளைகள் மீண்டும் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தன. நிஃப்டி50-யும் 353 புள்ளிகள் அதிகரித்து, 1.6 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது. இந்த உயர்வு ஆசிய சந்தைகளில் ஒரு பரந்த நேர்மறை அலையின் ஒரு பகுதியாகும். ஜப்பானின் நிக்கேய் 225 பெஞ்ச்மார்க், ஒரு நாள் முன்னதாக கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்த பின்னர் செவ்வாயன்று 6 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்தது.  ஆங்கிலத்தில் படிக்கவும்: Sensex Today, Stock Market Live Updates: Sensex sheds some gains after starting over 1000 points up in Tuesday morning trade வரி விதிப்புகளில் பல முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், சீனாவுக்கு 50 சதவீதம் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ‘இறுதிவரை போராடுவோம்’ என்ற தொனியில் சீனா உள்ளது. இதனால், பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.திங்களன்று சந்தை சரிவு: கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரி விதிப்புகளை அதிரடியாக உயர்த்தியதன் வெளிப்பாடாக, திங்களன்று உள்நாட்டு பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன. சென்செக்ஸ் 5.19 சதவீதம் என்ற அளவில்  3,914 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது.இதனிடையே, நிஃப்டி 5 சதவீத அளவில் 1,146.05 புள்ளிகள் சரிவுடன் 21,758.4-உடன் சந்தையை தொடங்கியது. இருப்பினும், திங்கள்கிழமை வர்த்தகத்தின் கடைசி மணிநேரத்தில் பங்குச் சந்தைகள் மீண்டு, சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 73,137 இல் நிறைவடைந்தது. நிஃப்டி 50 கடைசி மணிநேரத்தில் 200 புள்ளிகள் மீட்சிக்குப் பிறகு 22,161 இல் நிறைவடைந்தது.பெரும் விற்பனை குறித்து டிரம்பின் கருத்து என்ன?உலகளாவிய சந்தைகள் வீழ்ச்சியடைவதை தான் விரும்பவில்லை என்று டிரம்ப் முன்னதாக வலியுறுத்திருருந்தார். “ஆனால், சில நேரங்களில் நீங்கள் ஏதாவது ஒன்றை சரிசெய்ய மருந்து எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார். நிதிச் சந்தைகள் கடுமையான சரிவைத் தொடரும் பாதையில் தோன்றியபோது அவரது இந்த கருத்துக்கள் வந்தன.டிரம்ப், இந்தியா உட்பட முக்கிய வர்த்தக கூட்டாளிகள் மீது கடுமையான வரி விதிப்புகளை அறிவித்தார். ஏப்ரல் 2-ஐ “விடுதலை தினம்” என்றும் “அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான நாட்களில் ஒன்று” என்றும் அவர் அறிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன