டி.வி
ரோகிணியைப் பாத்து கைதட்டி சிரிக்கும் ஸ்ருதி..! சத்தியாவால் உருவாகும் புதுக்குழப்பம்!

ரோகிணியைப் பாத்து கைதட்டி சிரிக்கும் ஸ்ருதி..! சத்தியாவால் உருவாகும் புதுக்குழப்பம்!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி வித்தியாவுக்கு கால் எடுத்து வாழ்க்கை முழுக்க பிரச்சனையாத் தான் போய்க் கொண்டிருக்கு என்று சொல்லுறார். அதுக்கு வித்தியா ஏன் என்னாச்சு என்று கேக்கிறார். மேலும் ரோகிணி தன்ன இனிமேல் விஜயா ஷோரூமுக்கு போக வேணாம் என்று சொன்னத அவருக்குச் சொல்லுறார். அத்துடன் மனோஜையும் தன்னோட கதைக்க வேணாம் என்று சொல்லிட்டா என்கிறார்.இதனை அடுத்து ரோகிணி இதுக்கு வேற ஏதாவது பிளான் பண்ணனும் என்று சொல்லுறார். மேலும் இப்புடியே இருந்தால் என்ன இங்க வேலைசெய்யுற ஆளா மாத்திடுவாங்க என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து முத்து கார் ஓட்டும் போது காருக்குள்ள இருந்தவ குடிக்கிறதைப் பாத்து ரொம்பவே கோபப்படுறான்.பின் சத்தியாவ ரவுடிகள் காலேஜுக்குப் போய் கூட்டிக் கொண்டு போறார்கள்.அங்க சத்தியா தான் நல்லா படிக்கோணும் என்ன விட்டிரு என்று சொல்லுறார். இதனை அடுத்து அந்த ரவுடி, தன்ன பகைச்சுக்கிட்டு நீ வாழமுடியாது என்று சொல்லுறார். அந்த நேரம் பாத்து அங்க முத்துவும் வந்து நிக்கிறார். பின் அந்த ரவுடி சத்தியாவ பரீட்சை எழுத விடமாட்டேன் என்று சொன்னதைக் கேட்டு முத்து ரொம்பவே கோபப்படுறார்.மேலும் அவன் படிச்சு நல்லா பரீட்சை எழுதுவான் நீ எப்புடி அதைத் தடுக்கிற என்று நானும் பாக்குறேன் என்கிறார் முத்து. இதனை அடுத்து ரோகிணி தனக்குத் தேவையான சாப்பாட்டை தானே சமைக்கிறார். அதைப் பார்த்து ஸ்ருதி சிரிக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.