Connect with us

பொழுதுபோக்கு

14 வயதில் என்ட்ரி…19 வயதில் மரணம்: இடையில் அசைக்க முடியாத சாதனை செய்த நடிகை!

Published

on

Actress Divya Bharathi

Loading

14 வயதில் என்ட்ரி…19 வயதில் மரணம்: இடையில் அசைக்க முடியாத சாதனை செய்த நடிகை!

14 வயதில் திரையுலகில் அறிமுகமான ஒரு நடிகை, முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீக்ஷித் போன்ற நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒரே ஆண்டில் 12 படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த நடிகை 19 வயதிலேயே மரணமடைந்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல் அந்த நடிகை யார் தெரியுமா?கடந்த 1990-ம் ஆண்டு வெளியான நிலா பெண்ணே என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. அவர் நடித்த முதலும் கடைசியுமான தமிழ் திரைப்படம் இதுதான். 1974-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த இவர், நிலா பெண்ணே படத்திற்கு பிறகு, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் வெங்கடேஷ், சிரஞ்சீவி, மோகன்பாபு ஆகியோருடன் திவ்யபாரதி நடித்துள்ளார்.இந்தியிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள திவ்ய பாரதி, கடந்த 1992-ம் ஆண்டு, 2 தெலுங்கு படம், 10 இந்தி படம் என மொத்தம் 12 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் 1992-ம் ஆண்டில் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் ஒரு வருடத்தில் 5-6 படங்களில் நடிப்பதே பெரிய விஷயமாக இருந்த காலக்கட்டத்தில் திவ்யபாரதி ஒரே ஆண்டில் 12 படங்களில் நடித்து சாதித்துள்ளார்.தனது 14 வயதில் மாடலிங் உலகத்தில் நுழைந்த திவ்யபாரதி 16-வது வயதில் நிலா பெண்ணே படத்தில் நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கியுள்ளார். திரையுலகில் மொத்தம் 22 படங்களே நடித்துள்ள திவ்யபாரதி கடந்த 1993-ம் ஆண்டு, ஏப்ரல் 5-ந் தேதி மரணமடைந்தார். தனது வீட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்து அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. 1993-ம் ஆண்டு திவ்ய பாரதி இறந்தபோது அவர் தனது கைவசத்தில் 12 படங்களை வைத்திருந்துள்ளார்.இதில் 1993-ம் ஆண்டு வெளியான தொலி மூடு என்ற படத்தில், திவ்யபாரதிக்கு பதிலாக, நடிகை ரம்பா நடித்திருந்தார். அதேபோல் மிதுன்சக்ரவர்த்தி நடிப்பில், சாட்ரஞச் என்ற படம் 1993-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி வெளியானது. இதுதான் திவ்யபாதி நடிப்பில் வெளியான கடைசி படமாகும். அவர் இறந்த பிறகு, அவர் நடிப்பில் பாதியில் விட்டுச்சென்ற படங்களில், கஜோல், மனிஷா கொய்ராலா, தபு, மம்தா குல்கர்னி, பூஜா பட் உள்ளிட்ட நடிகைகள் நடித்து வெளியானது. 19 வயதில் திவ்யபாரதி இறந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன