சினிமா
கல்யாணத்துக்கு பின் மீண்டும் பழைய ஃபார்ம்-க்கு வந்த ரம்யா பாண்டியன்!! இப்படியொரு போட்டோஷூட்…

கல்யாணத்துக்கு பின் மீண்டும் பழைய ஃபார்ம்-க்கு வந்த ரம்யா பாண்டியன்!! இப்படியொரு போட்டோஷூட்…
ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார்.ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்.கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். எப்போது பழைய மாதிரி போட்டோஷூட் எடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியதோடு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது டிசர்ட் அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.