இலங்கை
காலி கோட்டை வீதி தாழிறங்கியது

காலி கோட்டை வீதி தாழிறங்கியது
வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கோட்டையின் ரெம்போர்ட் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.
சுமார் ஐந்து அடி விட்டம் கொண்ட பத்து அடி பகுதி இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாழிறங்கிய பகுதி 5 அடி ஆழம் கொண்டுள்ளதனால் , ரெம்போர்ட் வீதியில் தாழிறங்கிய பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை அந்த இடத்தில் முன்பு தாழிறக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருந்ததாகவும், அது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.