இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்துவது மிகஅவசியமே!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்துவது மிகஅவசியமே!
தாளத்தை மாற்றுகிறது அரசாங்கம்
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்ததாவது:
திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதச் சட்டமாகும்.
பயங்கரவாதத் தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம். ஆனால், தற்போது சில குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வேறு சட்டமொன்று நாட்டில் இல்லை. எனவே, தற்போது இருக்கும் சட்டத்தையே விரும்பியும், விரும்பாமலும் பயன்படுத்த வேண்டியுள்ளது.
தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை, தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, மாற்றுச் சட்டமொன்று கொண்டுவரப்பட்ட பின்னர், தற்போதைய சட்டம் நீக்கப்படும் – என்றார்.