நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 09/04/2025 | Edited on 09/04/2025

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தாக்கியதாக உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன். முகப்பேர் கிழக்குப் பகுதியில் இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே ‘டீ பாய்’ என்ற டீக்கடையில் டீ குடிக்க வந்த சிலர் தர்ஷன் வீட்டுக்கு முன்பு காரை பார்க் செய்துவிட்டு டீ குடிக்க சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தர்ஷன் தரப்புக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு கைகலப்பும் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நீதிபதியின் மகன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

Advertisement

பின்பு அவர் தர்ஷன் மீது ஜேஜே நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து தர்ஷனிடம் ஜெஜெ நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தர்ஷனும் தன் மீது தாக்குதல் நடத்தியதாக நீதிபதி மகன் உள்ளிட்ட அவருடன் வந்த சில நபர்கள் மீது ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.