Connect with us

சினிமா

மக்களின் அன்பைப் பார்த்து வாயடைத்துப் போன VJ டிடி..! சமூக ஊடகத்தில் வைரலான பதிவு..!

Published

on

Loading

மக்களின் அன்பைப் பார்த்து வாயடைத்துப் போன VJ டிடி..! சமூக ஊடகத்தில் வைரலான பதிவு..!

சமீபத்தில் நடந்த கலாட்டா நிகழ்வில் பிரபலமான டெலிவிஷன் தொகுப்பாளர் VJ திவ்யதர்ஷினி பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வின் போது தான் பெற்ற அன்பையும் கௌரவத்தையும் நினைத்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உணர்ச்சி பூர்வமான நன்றியினைப் பகிர்ந்துள்ளார்.திவ்யதர்ஷினி அதில் கூறியதாவது, “கேரவனில் இருந்து மேடைக்கு வந்த பாதையில் நீங்கள் எனக்கு அளித்த மகிழ்ச்சி அளவிட முடியாத ஒன்று. நிகழ்வு முழுக்க அன்பால் நிரம்பியிருந்தது. இந்த நட்சத்திரங்களைப் பாருங்கள், அவர்கள் எவ்வளவு தன்னலமற்ற முறையில் என் மீது அன்பைப் பொழிந்தார்கள். உண்மையில் அவர்கள் அனைவரும் பிரபலங்கள், ஆனால் அவர்கள் என்னை உற்சாகப்படுத்த மட்டுமே அங்கு வந்தார்கள். இது என்னை மிகவும் சந்தோசப்பட வைத்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.அந்நிகழ்வில் பல நட்சத்திரங்கள, பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோர் இருந்தனர். இவர்களது அன்பும் ஆதரவும் தன்னுடைய மனதை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், தனக்காக காத்திருந்து, திருஷ்டி எடுத்த அழகான அம்மாக்களைப் பற்றியும் அவர் சிறப்பாக குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாது, “நாங்கள் மேடையில் செய்த கலாட்டாவையும், நடனத்தையும் நீங்கள் அனைவரும் விரைவில் காணவிருக்கிறீர்கள். காத்திருங்கள்!” என்று டிடி உற்சாகமாக கூறினார். இந்நிகழ்வில் கலந்து கொள்ள தன்னை வற்புறுத்திய தினேஷிற்கு தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.இந்நிகழ்வின் மூலம் VJ டிடி மீது  மக்கள் வைத்திருக்கும் அன்பு தெளிவாகத் தெரிகின்றது. மேலும் கலாட்டா மூலம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன