இலங்கை
மருத்துவமனையில் சிவாஜிலிங்கம்!

மருத்துவமனையில் சிவாஜிலிங்கம்!
தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமான சிவாஜி லிங்கம், திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட பின்னரே, அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.