சினிமா
“லொள்ளு சபா” நடிகர் ஆண்டனி நுரையீரல் தொற்றால் உயிரிழந்தார்..!

“லொள்ளு சபா” நடிகர் ஆண்டனி நுரையீரல் தொற்றால் உயிரிழந்தார்..!
தென்னிந்திய சினிமா மற்றும் தமிழ் தொலைக்காட்சித் துறையில் பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு பெரும் நகைச்சுவையை கொடுத்த நடிகர் ஆண்டனி இன்று உயிரிழந்துள்ளார். நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவர் ரசிகர்களை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.”லொள்ளு சபா” நிகழ்ச்சியில் சந்தானம் உடன் பல முக்கிய எபிசோடுகளில் கலந்துகொண்ட ஆண்டனி தனது காமெடி திறமைகளால் ரசிகர்களிடையே பெரும் புகழைப் பெற்றவர். அவர் சந்தானம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்ததன் பின்னர் “தம்பிக் கோட்டை” மற்றும் பல படங்களில் சந்தானத்தின் நண்பராக காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.அவர் வாழ்க்கை முறையில் எளிமையும் பெருமை இல்லாத பண்பு கொண்டவர் என்பதால் அவருடைய மறைவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இவரது மறைவுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா சமூகம் முழுவதும் இரங்கல்களைக் கூறி வருகின்றனர்.