சினிமா
15 வருஷ காதல்..வருங்கால கணவருடன் ரொமான்ஸ்!! நடிகை அபிநயா வெளியிட்ட புகைப்படங்கள்..

15 வருஷ காதல்..வருங்கால கணவருடன் ரொமான்ஸ்!! நடிகை அபிநயா வெளியிட்ட புகைப்படங்கள்..
நாடோடிகள், மார்க் ஆண்டனி, பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அபிநயா. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்து பல மொழிகளில் நடித்த நடிகை என்ற சாதனையும் அபிநயா பெற்றுள்ளார்.விஷாலுடன் நடித்த போது அவருடன் காதல் என்றும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் செய்திகள் பரவி பரபரபை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நான் இப்போது ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறேன். என்னுடைய சின்ன வயது நண்பர் தான் என்னோட பாய் ஃபிரெண்ட். 15 ஆண்டுகளாக இந்த உறவு தொடர்கிறது.அவர் என் ஃபிரெண்ட் என்பதால் அவரிடம் எந்த விஷயமாக இருந்தாலும் பேசமுடியும். இன்னும் எங்களின் கல்யாணம் பற்றிய பிளான் எதுவும் பண்ணவில்லை. என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.கடந்த மார்ச் 9 ஆம் தேதி அபிநயா தன்னுடைய 15 ஆண்டுகால காதலருடன் நிச்சயத்தை முடித்திருக்கிறார். தற்போது நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு மாதமான நிலையில் கேக் வெட்டி அதனை கொண்டாடி இருக்கிறார். தன்னுடைய வருங்கால கணருடன் எடுத்த க்யூட் ரொமான்ஸ் புகைப்படங்களை அபிநயா பகிர்ந்துள்ளார்.