சினிமா
அஜித்துடன் நடித்த தருணம் வாழ்நாளில் மறக்கவே முடியாது..!பிரசன்னாவின் நெகிழ்ச்சியான கருத்து

அஜித்துடன் நடித்த தருணம் வாழ்நாளில் மறக்கவே முடியாது..!பிரசன்னாவின் நெகிழ்ச்சியான கருத்து
தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் வலம் வருபவர் பிரசன்னா. அவருடைய நடிப்பு திறமைக்கேற்ப அதிகளவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். சமீபத்தில், அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடன் சேர்ந்து நடித்த அஜித் பற்றிக் கூறியுள்ளார்.பிரசன்னா அது குறித்துப் பேசும் போது, “தனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக நடிகர் அஜித் உடன் நடித்த தருணத்தை குறிப்பிடலாம் என்றார். மேலும் தனக்குப் பிடித்த நடிகருடன் சேர்ந்து நடித்தது, என் வாழ்நாளில் என்றும் நினைவில் இருக்கும் தருணம். அதற்காக நான் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகவும் நன்றி சொல்ல விரும்புகின்றேன்” என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.மேலும் பிரசன்னா தனது உணர்ச்சிகளை இவ்வாறு வெளிப்படுத்திய விதம் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் “அஜித் சாருடன் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது பெரிய பாக்கியம். லவ் யூ அஜித் சார்..!” எனவும் கூறியுள்ளார். அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்களும் பிரசன்னாவின் கருத்தை வரவேற்றுள்ளனர். அத்துடன் இதுபோன்ற முன்னணி நடிகரை சக நடிகர் பாராட்டுவது என்பது அரிதான ஒரு விடயம் எனவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.