இலங்கை
அமெரிக்க வரிகளால் பொருளாதாரப் பேரழிவு; ரணில் சுட்டிக்காட்டு!

அமெரிக்க வரிகளால் பொருளாதாரப் பேரழிவு; ரணில் சுட்டிக்காட்டு!
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவு ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தற்போது உலகளாவிய பதற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான சீனாவின் வரிகள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன. இந்த வர்த்தகப் போரால், இலங்கை போன்ற சிறிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சிலவேளைகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிக்கு முன்பிருந்த நிலைக்குக் கட்டணங்கள் திரும்பாது என்பதை உறுதியுடன் கூறிக்கொள்ள முடியும். ஆதலால், இந்த மாறுபட்ட பொருளாதாரச் சீர்குலைவு வேலையிழப்புகள் ஏற்படவும் காரணமாக அமையும் – என்றார்.