இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில் மட்டக்களப்பு வவுனிதாவு பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அப்போது அரச புலனாய்வு சேவைகளில் பணியாற்றியதாகக் கூறப்படுகின்ற நிலையில் அவர் நேற்றையதினம் கரடியனாறு பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.