சினிமா
கதைய மாத்து! இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்

கதைய மாத்து! இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்
சமீபத்தில் வெளிவந்து படுதோல்வியடைந்த திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருந்தனர். ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கியிருந்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், பிரபல மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.இதில் “கோடிகளை போட்டு சல்மான் கான் சிக்கந்தர் படத்தை எடுத்தார். ஆனால், முருகதாஸுக்கு சுதந்திரமே கொடுக்கவில்லை. அவரை போட்டு டார்ச்சர் பண்ணி. இத எடு, அத எடு கதையே மாத்து என சொல்லி, நான் படப்பிடிப்பிற்கு வர மாட்டேன், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.அப்படி இப்படி சொல்லி ஒரு நெருக்கடி கொடுத்து, அவர் என்னோமோ உப்புமாவை கிண்டி வைத்துவிட்டார். இதனால் படம் எவ்வளவு பெரிய நஷ்டம் ” என பேசியுள்ளார்.