
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 10/04/2025 | Edited on 10/04/2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் இன்று(10.04.2025) வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. திரையரங்க வளாகத்திற்குள் வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்தும் கேக் வெட்டியும் மேளதாளத்துடன் அதிகாலை முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கீதா ஜீவன் திருப்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு படத்தையும் பார்த்து மகிழ்ந்தார். சென்னையில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்து படக்குழுவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இந்த நிலையில் கேரளா எர்ணாகுளத்தில் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படத்தில் நடித்த கேரள நடிகர் ஷைன் டாம் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.