Connect with us

திரை விமர்சனம்

“குட் பேட் அக்லி” திரைப்படம் சம்பவம் செய்ததா..? இல்லையா..? திரைவிமர்சனம் இதோ..

Published

on

Loading

“குட் பேட் அக்லி” திரைப்படம் சம்பவம் செய்ததா..? இல்லையா..? திரைவிமர்சனம் இதோ..

அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் மைத்திரி மூவிஸ் கூட்டணியில் உருவாகி இன்று அதிகாலை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.மேலும் இப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன் என நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அஜித்தின் ரசிகர்களுக்கு திருப்தியா ? இல்லையா ? திரைவிமர்சனம் இதோ..அஜித் படை நடுங்கும் ஒரு பெரிய கேங்ஸ்டராக இருக்க அவரது அந்த வேலையால் குடும்பத்திற்கு பெரிய இழப்பு வருகின்றது. இதன் காரணமாக அவருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு திரிஷா அனுமதிக்க மறுக்கின்றார்.இதன் காரணமாக அஜித் பொலிஸிடம் சென்று அப்ரூவல் ஆகி  திருந்தி 17 வருடத்தின் பின் தனது பழைய கொடூர வாழ்கையை விட்டு தனது செல்ல மகனை பார்க்க ஓடி வருகிறார்.அவர் பார்க்க வரும் போது அஜித் மகனை கொடூர வில்லன் அர்ஜுன் தாஸ் காவல்துறையிடம் ஏதோ ஒரு காரணத்துகாக மாட்டி விடுகின்றார். இதன் காரணமாக திருந்தி குட்டாக இருந்த அஜித் bad ஆக மறுக்கின்றார்.வில்லன் அர்ஜுன் தாஸ் எதற்காக தனது மகனை ஜெயிலுக்கு அனுப்பினார் காரணத்தை தெரிந்து தன் மகனை ஜெயிலில் இருந்து AK மீட்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.மேலும் படத்தின் இசையமைப்பு மிகவும் அருமையாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். படத்தின் இரண்டாம் பாதி ஆரம்பமாகியதும் அஜித் எனும் ப்ளாஷ்பேக் அதில் டான் லீ, ஜான் விக், ப்ரோபோஷன் ரெபரன்ஸ் என 10 தீபாவளி காட்டியுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.மற்றும் பிரசன்னா, சுனில் எல்லாம் அஜித்துடன் கூடவே வந்து, அவ்வப்போது அஜித்தை பில்டப் செய்யவே மட்டும் தான் வருகிறார்.படத்தில் பல சர்ப்ரைஸ் காணப்படுகின்றது. அதாவது சிம்ரன் எண்ட்ரி அதை கையாண்ட விதம் என அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.மேலும் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளதுடன் அஜித் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் திரையில் அழகாக தெரிகின்றனர். மேலும் இப் படத்தில் அஜித் ப்ளாஷ்பேக் காட்சிகள்,சண்டை காட்சிகள் போன்றவை ரசிக்கும் படியாக அமைந்திருந்தாலும் ஓவர் சத்தம், சலிப்பு வருகிறது,பல காட்சிகளில் லாஜிக்கை கழட்டி வைத்துள்ளனர் போன்ற எதிர்மறையான விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் விடாமுயற்சி படத்தை விட பல மடங்கு படம் சூப்பராக இருப்பதாகவும் 500 கோடி வசூலினை எதிர்பார்க்கலாம் எனவும் பலர் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன