திரை விமர்சனம்
குட் பேட் அக்லி வேற லெவல் சம்பவம் மாமே..! தியட்டரை மிரள வைத்த ரசிகர்கள்..!

குட் பேட் அக்லி வேற லெவல் சம்பவம் மாமே..! தியட்டரை மிரள வைத்த ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள “குட் பேட் அக்லி” படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் சிறப்பாக இசையமைத்துள்ளார். தற்பொழுது அப்படத்தினை திரையரங்குகளில் பார்வையிட்ட ரசிகர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.தமிழ் சினிமாவில் ஒரு தென்றலாக உருவான “குட் பேட் அக்லி” படம் வெளியாகிய சில மணிநேரங்களிலேயே, திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன் படத்தைப் பார்த்த ரசிகர்கள் “10 வருஷத்துக்கு முன்னாடி இருந்த அஜித் சாரை இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்காங்க போல இருக்கே!” எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.மேலும் எதிர்பார்ப்பைத் தாண்டிய திரைக்கதையாக காணப்பட்டது எனவும் கூறியுள்ளனர். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக காணப்பட்டது எனவும் கூறியுள்ளனர். இவ்வாறாக படம் வெளியாகிய பின் சமூக ஊடகங்களில் பாசிட்டிவ் கருத்துக்கள் புயலாக பரவி வருகின்றன. அத்துடன் இப்படம் இதுவரைக்கும் யாரும் கண்டிராத வசூலைப் பெறும் எனவும் எதிர்பார்க்கபடுகின்றது.