இந்தியா
‘சாதி அரசியலை ஆதரிக்கவில்லை, சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறேன்’ – சிராக் பாஸ்வான்

‘சாதி அரசியலை ஆதரிக்கவில்லை, சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறேன்’ – சிராக் பாஸ்வான்
“பீகார் முதலில், பீகார் மக்கள் முதலில்” என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் (எல்.ஜே.பி – ஆர்வி) தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார். பீகார் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.ஆங்கிலத்தில் படிக்க:டெல்லியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் அட்டா நிகழ்ச்சியில் பேசிய மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், சாதிவாரி கணக்கெடுப்பு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்க அரசாங்கத்திற்கு தரவுகளை வழங்கும் என்று நம்புவதாக கூறினார். ஆனால், அத்தகைய தரவுகள் சாதியவாதத்தை தூண்டும் என்பதால் பொதுவெளியில் வெளியிடப்படக்கூடாது என்றும் கூறினார்.“சாதி அரசியலை ஆதரிக்கவில்லை, ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறேன்” என்பது முரண்பாடாக தோன்றினாலும், சாதி என்பது நாட்டின் கசப்பான உண்மை என்று பாஸ்வான் கூறினார். மக்களின் மேம்பாட்டிற்கான பாகுபாடு மற்றும் பல்வேறு அரசு திட்டங்கள் இரண்டும் சாதியின் அடிப்படையில் அமைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மாநில அரசுகள் சாதி தரவுகளை வைத்திருக்க வேண்டும், ஆனால், அதை பொதுவெளியில் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அனந்த் கோயங்கா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தேசிய கருத்து ஆசிரியர் வந்திதா மிஸ்ரா ஆகியோருடன் பாஸ்வான் உரையாடினார்.“பீகார் முதலில், பீகார் மக்கள் முதலில்” என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறிய பாஸ்வான், “எனக்கு மை ஃபார்முலா (MY Fromula – இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள்) உள்ளது. எனது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2 பேர் பெண்கள். 14 கோடி பீகார் மக்களைப் பற்றி நான் பேசுகிறேன். பீகார் மக்கள் பீகாரை விட்டு வெளியே வந்து சாதியை மறக்கும்போது, ஊடகம், கார்ப்பரேட் மற்றும் அதிகாரத்துவம் என ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள்” என்றார்.பீகாரின் வளர்ச்சிக்காக உழைப்பதுதான் தற்போதைய தேவை என்றும், மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அதை அடைய உதவும் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டசபை தேர்தலில் தற்போதைய என்.டி.ஏ கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.பல்வேறு கட்சிகள் அதிகாரத்திற்கு வருவதற்காக இலவசங்களை வழங்குவது குறித்து கவலைப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, “சமீபத்தில், ஆம், அது ஒரு கவலை. பணத்தைப் பற்றி பேசவில்லை, ஆனால் ஒரு வரி செலுத்துபவராக, வங்கிகளில் பணம் போடுவதை விட சேவைகள் மிகவும் முக்கியம் என்று கூறுவேன். கல்வி மற்றும் சுகாதாரம் இலவசமாக இருக்க வேண்டும். 2047-க்குப் பிறகு, நாம் ஒரு வளர்ந்த நாடாக மாறும் போது, இந்த விஷயங்கள் சேவைகளில் பயன்படுத்தப்படும் என்று நம்புகிறேன்” என்றார்.வக்பு திருத்த சட்டத்தை நியாயப்படுத்திய எல்.ஜே.பி (ஆர்.வி) தலைவர், குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) அல்லது பிரிவு 370 ஆக இருந்தாலும், முஸ்லிம்களிடையே அவநம்பிக்கையை பரப்ப சில வட்டாரங்களில் ஒரு போக்கு உள்ளது என்றார். சி.ஏ.ஏ சில அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது என்றும், ஆனால், அது குடியுரிமையை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் ஒரு கதையை உருவாக்கியது என்றும், அது பல ஆண்டுகளாக தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இதேபோன்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டது என்றும், ஆனால், ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன, அதில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டின் உமர் அப்துல்லா மீண்டும் முதலமைச்சரானார் என்றும், இது பேரழிவு கணிப்புகள் தவறானவை என்பதை காட்டியது என்றும் பாஸ்வான் கூறினார்.வக்பு சட்டத்திற்கு எதிரான இதேபோன்ற பிரச்சாரம் இருந்தபோதிலும், அதன் பாதையும் இதேபோல் இருக்கும் என்றும், இந்த சட்டம் நல்லது என்பதை மக்கள் காலப்போக்கில் உணர்வார்கள் என்றும் அவர் கூறினார். “நீங்கள் (எதிர்க்கட்சி) இப்போது நீதிமன்றங்களுக்கு விரைந்து செல்கிறீர்கள், ஆனால் பெரும்பாலான வழக்குகளில் மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாத முன்னாள் சட்டத்தை ஆதரிக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.மீண்டும் தன்னை “பிரதமர் நரேந்திர மோடியின் அனுமன்” என்று விவரித்த பாஸ்வான், 2021-ல் தனது தந்தை ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பிறகு தனது கட்சி மற்றும் குடும்பத்திற்குள் இருந்து நிறைய எதிர்ப்புகளை எதிர்கொண்டபோது மோடி தனக்கு ஆதரவளித்ததாக கூறினார். 6 பிரதமர்களின் கீழ் பணியாற்றிய தனது தந்தை, மோடி சொன்னதைச் செய்பவர் என்றும், அமைச்சர்களை பொறுப்புகளை ஏற்கச் செய்து நிறைவேற்றினார் என்றும் கூறினார். “இளைஞர்கள் 2014-ல் பிரதமருடன் இணைந்தனர். நாங்கள் என்.டி.ஏ-வில் சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்” என்றார்.தற்போதைய அரசியலில் அதிகரித்து வரும் கசப்பு குறித்து கேட்டதற்கு, தனது தந்தையைப் போலவே அனைத்து அரசியல் கட்சிகளிலும் தனக்கு நண்பர்கள் இருப்பதாகவும், ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவையும் ஒரு “தம்பியாக” கருதுவதாகவும் பாஸ்வான் கூறினார். அனைத்து கட்சிகளும் சமீபகாலமாக “அதிபர்” பாணியில் மாறி வருவதாகவும், மற்ற கட்சிகளின் உறுப்பினர்களுடன் பழகினால் தங்கள் தலைவர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்று கட்சித் தலைவர்கள் பயப்படுவதாகவும் அவர் கூறினார்.பா.ஜ.க தனது கூட்டணி கட்சிகளை “விழுங்கிவிடும்” என்ற கருத்து குறித்து கவலைப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, ஒரு கட்சி தன்னை வலுவாகவும் மக்களுடன் தொடர்பில் வைத்திருக்கும் வரை யாரும் அதை விழுங்க முடியாது என்று நம்புவதாக பாஸ்வான் கூறினார். “பீகாரில் நான் தொடர்பை இழந்தால், நான் வீழ்ச்சியடையத் தொடங்குவேன்” என்று அவர் மேலும் கூறினார்.கடந்த காலத்தைப் போல தற்போதைய என்.டி.ஏ-வுக்கு நிறுவன ஏற்பாடுகள் அல்லது பொதுவான குறைந்தபட்ச திட்டம் (சிஎம்பி) ஏன் இல்லை என்று கேட்டதற்கு, “கூட்டணி ஒருங்கிணைப்பு குழுக்களை வைத்திருப்பது ஒரு நல்ல கருத்து. சிஎம்பிகளும் இருந்தன. ஆனால் அவை கூட்டணிகளின் தேவை இருந்தபோது” என்றார். 2014-க்குப் பிறகு 10 ஆண்டுகளாக இதுபோன்ற தேவை இல்லை என்றும், பாஜகவுக்கு தெளிவான பெரும்பான்மை இருந்ததாகவும், இப்போது கூட “பேச்சுகளும் தொடர்புகளும் தொடர்கின்றன” என்பதால் அவசர தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தேவையான ஒன்றை தெரிவிக்க வேண்டியிருந்தால், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அணுக முடியும் என்று அவர் கூறினார்.ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்திருப்பது அரசியலில் ஆரம்பத்தில் உதவியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொண்ட பாஸ்வான், தலைமைக்கு திறன் இல்லாவிட்டால் அத்தகைய கட்சிகள் வீழ்ச்சியடையும் என்றார்.வரவிருக்கும் பீகார் தேர்தல்கள் குறித்து கேட்டதற்கு, என்.டி.ஏ ஒரு “வெற்றி கூட்டணி” என்றும், சமீபத்திய இடைத்தேர்தல்களில் பெலகஞ்ச் போன்ற நீண்ட காலமாக வெற்றி பெறாத இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பாஸ்வான் கூறினார். “பீகார் முதல்வர் (நிதிஷ் குமார்) பெண்களுக்கு நிறைய செய்துள்ளார், பெண் வாக்காளர்கள் இன்னும் அவருடன் தொடர்பு கொண்டுள்ளனர்” என்றார். என்டிஏ அரசாங்கத்தின் கீழ் தடை மற்றும் பாதுகாப்பு உணர்வு நிதிஷின் புகழ் பெண்களிடையே நிலைத்திருக்க உதவியது என்று அவர் கூறினார். “நான் அவருடன் கூட்டணியில் இல்லாதபோதும் தடையை ஆதரித்தேன்” என்று அவர் மேலும் கூறினார்.பீகார் மாநிலத்திற்காக உழைப்பதை தனது எதிர்காலமாக பார்ப்பதாக கூறிய பாஸ்வான், மும்பையில் இருந்தபோது ஒரு பிராந்திய கட்சி பீகார் மக்களை அடித்து துன்புறுத்தியதை நினைவு கூர்ந்தார். அதை பார்த்துக்கொண்டு அங்கு வாழ்வதை விட பீகார் சென்று ஏதாவது செய்வது நல்லது என்று நினைத்தேன்.சிவசேனா தலைவர் மற்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் குனால் காம்ரா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, ஒரு நபரை இழிவுபடுத்தும் வகையில் இதுபோன்ற வார்த்தைகளை கூறுவது நல்லதல்ல என்பதை காம்ரா நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும், அவரது வளாகத்தில் வன்முறை செய்ததும் தவறு என்றும் பாஸ்வான் கூறினார்.