Connect with us

உலகம்

டொமினிகன் குடியரசு இரவு விடுதி விபத்து – பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

Published

on

Loading

டொமினிகன் குடியரசு இரவு விடுதி விபத்து – பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.

நேற்று முன்தினம் அந்த விடுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருந்தனர். 

100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்நிலையில் கட்டிடத்தில் சிக்கி இறந்து போனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

படுகாயம் அடைந்த 160 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

images/content-image/1744302620.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன